Sunday, May 30, 2010
வாய் விட்டு சிரிக்க
குழந்தைகள் நாம் யோசிக்க எண்ணாத கோணங்களில் நிறையவே பயணப்படுகின்றனர். அவர்களின் உலகை எட்டி பார்த்த பொழுது.. டேய்! இது எல்லாம் கண்ணாடி ஜாடி, தொட்டு விடாதே! எல்லாம் ஒடஞ்சிடும். இது நம் அக்கறை; அறிவுரை; அடுத்த பத்தாவது நிமிடம் கண்ணாடி ஜாடி நிச்சயம் சுக்கலாய் உடைந்திருக்கும். இன்னும் சில பையன்கள் உள்ளனர். கண்ணாடி பாட்டில் இருந்தால், போகிற போக்கில் ஒரு தள்ளு. அது உடைந்தால் எப்படி இருக்கும் என பார்க்க வேண்டாமா? யாராவது செயல் முறை விளக்கம் கொடுத்தால் தானே? நண்பர் ஒருவர் தான் சந்தித்த சம்பவத்தை விவரித்து இருந்தார். அவரது குடும்பம் முழுதும் ஒரு வாரம் மூணார் போய் விட்டு வந்து இருந்தனர். வரும் பொழுது, அங்கிருந்தே ஐந்து கிலோ வரை தேயிலை தூள் வாங்கி வந்திருந்தனர். ஊருக்க வந்த ஒரு சில நாளில், அவர் வீட்டு வாண்டு, தன் நண்பர்களை அழைத்து, அந்த ஐந்து கிலோ டப்பாவை கீழே கவிழ்த்து, இதோ பாருங்கள்! இது தேயிலை. இதை நாங்கள் மூணாறில் இருந்து வாங்கி வந்தோம் என விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான். அவனது கை நிறைய தேயிலையை அலைந்ததும், தரை நிறைய மண்ணாய் இருந்ததும் வேறு விஷயம்.
இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது.
அது ஒரு காலை நேரம். அந்த சமயம் சிறுவன் பாபி, சமையலறையை எட்டி பார்கிறான். அவனது அம்மா மதிய சமையலுக்காக, மும்முரமாய் வேலை செய்து கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவனது பிறந்த நாள் வர போகின்றது. தனக்கு என்ன வேண்டும் என்பதை இப்பொழுதே சொல்லி உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்பது அவனது அவா. பாபி அவன் அம்மாவை நெருங்கி, அம்மா எனக்கு என் பிறந்த நாளுக்காய் ஒரு பைக் வாங்கி தா என்கிறான்.
சிறுவன் பாபி நிறையவே குறும்புகள் செய்வபன். பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, அவனது வால்தனம்?! சற்றே அதிகம். பாபியை நோக்கி திரும்பிய அவன் அம்மா.. நீ நிஜமாய், பைக்கை பெற அருகதை உள்ளவனா? யோசித்து பார் என கேட்டார்.. பாபி தனக்குள் அந்த தகுதி இருப்பதாகவே நினைத்தான். அவனது அம்மா, அவனது கடந்த ஒரு வருட செயல்களை நினைவுக்கு கொணர முயன்றார். அவர் பாபியிடம் நீ உன் அறைக்கு சென்று, சென்ற ஒரு வருடத்தில் எப்படி நடந்து கொண்டாய் என யோசித்து பார் என சொன்னார். மேலும் அதன் பின், நீ எவ்வளவு தூரம் தகுதியானவன் என்பதை சொல்லி கிருஷ்ண பகவானுக்கு கடிதம் எழுது என்றார். தன் அறைக்கு வந்த பாபி கிருஷ்ணனுக்கு கடிதம் எழுத அமர்ந்தான்.
கடிதம் 1
அன்புடைய கிருஷ்ணா,
நான் இந்த வருடம் நிறையவே, நல்ல பையனாக இருந்தேன். நான் எனது பிறந்த நாளுக்காய், ஒரு பைக்கை எதிபார்க்கிறேன். அதன் நிறம் சிவப்பாய் இருக்கட்டும்.
உன் நண்பன்,
பாபி.
பாபிக்கு தெரிந்த வரையில் தான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. ஆகவே இந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத ஆரம்பித்தான்.
கடிதம் 2
அன்புடைய கிருஷ்ணா,
இது உன் நண்பன் பாபி. நான் இந்த வருடம் நல்ல பையனாய் இருந்தேன். நான் சிவப்பு நிற பைக்கை பெற ஆவலாய் உள்ளேன். நன்றி,
நட்புடன்,
பாபி.
இதன் பின் பாபி யோசித்தான். தான் சொன்னது பொய்யே. அதனால் அந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத துவங்கினான்.
கடிதம் 3
அன்புடைய கிருஷ்ணா,
நான் இந்த வருடம் பரவாயில்லை ரகத்தில் இருந்தேன். இருப்பினும் எனக்கு ஒரு பைக் வேண்டும்.
பாபி.
இந்த கடிதத்தையும் இறைவனுக்கு அனுப்ப முடியாது என பாபிக்கு தெரியும். ஆகவே அதையும் கிழித்து விட்டு நான்காவது கடிதத்துக்கு தாவினான்.
கடிதம் 4
கிருஷ்ணா,
எனக்கு தெரியும்! நான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. நான் அதற்காக வருத்தபடுகிறேன். நான் இனி நல்ல பையனாய் இருப்பேன். ஆகவே எனக்கு பைக்கை தயவுகூர்ந்து அனுப்பி வை. நன்றி.
பாபி.
பாபி அறிந்தவரை இது உண்மையாய் இருப்பினும், இறைவன் தனக்கு பைக்கை அனுப்ப மாட்டான் என எண்ணினான். துக்கம் அவனை ஆட்கொண்டது. அதன் பின், அவனது அம்மாவிடம் சென்று தான் கோயிலுக்கு சென்று வருவதை சொல்லி சென்றான். அந்த நிலையில் அவனது அம்மா தனது எண்ணம் வெற்றி கண்டதாய் எண்ணினார். பாபியின் முகம் வாடி இருந்ததே அதற்க்கு காரணம். அந்த நிலையில் அவனது அம்மா பாபியிடம் மறக்காமல், மதிய உணவுக்கு வருமாறு ஞாபகப்படுத்தினார். கீழே இறங்கி வந்தே பாபி, தன் தெருவில், இறுதி திருப்பத்தில் இருந்த கிருஷ்ணர் கோவிலை சென்றடைந்தான்.
கோவிலில் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. அந்த நிலையில் குனிந்து அங்கு இருந்த ராதை சிலையை எடுத்தான். எடுத்தவன், ராதை சிலையை, தன் சட்டை இடைவெளியில் மறைத்து கொண்டான். பின் அங்கிருந்த தன் வீட்டுக்கு ஓட்டம் எடுத்தான். பின் தன் அறைக்கு வந்த அவன் வீட்டு கதவை தாளிட்டான். அதன் பின் ஒரு தாளுடன், கிருஷ்ணனுக்கு கடிதம் எழுத அமர்ந்தான்.
கடிதம் 5
நான் உன் பிரிய காதலியை கடத்திக்கொண்டு வந்து விட்டேன். அவளை மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தால், எனக்கு பைக்கை உடனடியாக அனுப்பி வை!!!!!
இப்படிக்கு,
பாபி.
.
.
Labels:
நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒரு புதுமையான நகைச்சுவை பதிவுதான் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
very good article ever I read
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்