Sunday, December 18, 2011

படித்ததில் பிடித்தது..

நான் வாய் விட்டு சிரித்த சமீபத்திய நகைச்சுவைகள்.. இவை யாவும் விகடனில்(பொக்கிஷம் பகுதி) நான் கண்டவை.. எல்லாமே சிரிப்பு குண்டர்கள் தான்...
(அட அநியாயமே.. யாராருக்கு எல்லாம் கோபிக்கறது)


(அட! என்ன ஒரு அக்கறை.. )



(முன்னமே சொன்னனே ! எங்க சேர்மனே தனி தான் )


(அட இவரு வேறயா..)


ரெண்டும் உங்களுக்கு இல்லை.. ஆமா.. சொல்லிபுட்டேன்..

நான் ஆண்டு முழுவதும் வாசித்து சிலாகிப்பது - "ப்ரோசன் தாட்ஸ்"(Frozen Thoughts)  புத்தகத்தை..


டி. டி. ரங்கராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது . அந்த நிமிடங்கள், பவுன் நிமிடங்களே.. கடந்த நவம்பர் இதழில் இரண்டு பகுதிகள் என்னை கவர்ந்தன. அந்த பக்கங்களை படித்த பின், என் வாழ்வை பற்றியும் பயணிக்க தோன்ற வைத்தது . நல்ல எழுத்து நம் எண்ணங்களையும் மாற்றும் வல்லமை கொண்டதுதானே. ; என் முதல் விருப்பம்: எவர் சின்ஸ்(Ever Since) பகுதி . எதில் டி டி ஆர் தன் வாழ்வு நிகழ்ச்சிகள் மூலம் நிறைய சொல்லி செல்கிறார். அவருக்கு கிடைத்த முதல் பாராட்டை பற்றியது. ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய கைதட்டல் ஞாபகங்கள்.. தான் சாதாரண மாணவனை இருந்ததும், முதல் முதலாய் பள்ளி பிரின்சிபால் உடன் கை குலுக்க நேர்ந்ததையும், ஒரே இரவில் பள்ளியில் பிரபல்யம் அடைந்ததையும் சொல்கிறார். தன்னிடம் இருக்கும் தனி தன்மை வெளிப்பட்ட ஒற்றை தருணமே ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னொரு பிறவி. அன்றே புதிதாய் பிறக்கிறார்கள்..

My Dear Grandma


அதில் நான் கண்ட இன்னொரு பகுதி, பரமன் பச்சைமுத்து அவர்களின் என் பிரியமான பாட்டிக்கு என அவர் தன் பாட்டிக்கு எழுதும் கடிதம்.. பாட்டி மறைந்து பல வருடங்கள் கழித்து தன் பாட்டி செய்த எல்லா நல்லவற்றுக்கும் நன்றி சொல்கிறார். தான் ஆரோக்கியமாய் இருக்க பாட்டி எடுத்து கொண்ட முயற்சிகள், இன்றைய அறிவியல் உலகம் பல ஆராய்ச்சிகளுக்கு பின் அதையே புட்டு புட்டு வைக்கிறது. பெரியவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சிக்கு பின்பும் , ( அது என்னை குளியலாகட்டும், மார்கழியிலும் பச்சை தண்ணீர் நீராடல்,வேப்பிலையை கொடுத்து சாப்பிட வைத்தல்.. ) ஆயிரம் அர்த்தங்கள்..
.
.

Saturday, December 10, 2011

ஒரு திருக்கார்த்திகை நாள் - திருவண்ணாமலை



ஒவ்வொரு கார்த்திகை மாதத்தையும், மஹா தீப ஜோதியை கடக்கும் நாளிலும் திருவண்ணாமலை நினைவுக்கு வரும். அருணாச்சல ஈசனும், அபிதாம்பாளுக்கும் அடுத்தபடி ரமணர் நினைவில் நிழல் கொள்கிறார்.

அன்று திரு கார்த்திகை திருநாள். எப்போதும் போல், ஜே! ஜே! என கூட்டம் அண்ணாமலையில். வந்த கூட்டம், ரமண மகரிஷியை காணவும் முண்டியடிக்கிறது. ரமணர் கூட்டத்தால் அவதியுறுகிறார் என எண்ணிய அவரது வட்டம், அவருக்கும் பக்த கூட்டத்துக்கும் இடையே ஒரு தடுப்பை உருவாக்கியது. மேலும் அவரை யாரும் அண்டி விடாத படி, வந்தவர்களை விரட்டி கொண்டிருந்தனர். இதை கண்ட ரமணர் அதிகம் துணுக்குற்றார். அவர்களிடம் கோபித்து கொண்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை...

என்னை நோக்கி வரும் யாவரையும், அருணாச்சல சிவனாகவே பார்க்கிறேன். அவர்களை புறக்கணித்தால், அருணாச்சல ஈசனை புறக்கணித்தது போல் ஆகும். ஆகவே அவர்கள் என்னை வந்து காணட்டும் என கேட்டு கொண்டார்.

ஒரு முறை, ரமணரின் பக்தர் ஒருவர், தீராத வாழ்க்கை நெருக்கடியில், ரமணரை காண வந்தார். வந்தவரை ரமணர் தன்னுடன் இருக்க வைத்து கொண்டார். வந்தவருக்கோ, தவிப்புக்கு மேல் தவிப்பு. பகவானே! நான் அங்கே இல்லை என்றால் யாவும் கை மீறி போய்விடும் என இறைஞ்சினார். ரமணரோ, அமைதியாய் இரு என சொல்லி வந்தார். ஏறக்குறைய பதினைந்து நாளுக்கு பின் அந்த நண்பர் ஊருக்கு அரை மனதுடன் திரும்பினார். என்ன ஆச்சர்யம்?, ஊரில் நிலைமை சீரடைந்து இருந்தது.

ரமணரின் கரம் பற்றி நடந்தால், ஆயிரம் விஷயங்கள். ஆயிரம் ஆச்சர்யங்கள். ராஜு முருகனின் வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன. அடிவானத்தை நோக்கி புன்முறுவலோடு நடக்கும் ரமணரின் கண்களிலும் மெய்தேடல் போதை தட்டுப்படுகிறது.
.