Saturday, December 10, 2011

ஒரு திருக்கார்த்திகை நாள் - திருவண்ணாமலை



ஒவ்வொரு கார்த்திகை மாதத்தையும், மஹா தீப ஜோதியை கடக்கும் நாளிலும் திருவண்ணாமலை நினைவுக்கு வரும். அருணாச்சல ஈசனும், அபிதாம்பாளுக்கும் அடுத்தபடி ரமணர் நினைவில் நிழல் கொள்கிறார்.

அன்று திரு கார்த்திகை திருநாள். எப்போதும் போல், ஜே! ஜே! என கூட்டம் அண்ணாமலையில். வந்த கூட்டம், ரமண மகரிஷியை காணவும் முண்டியடிக்கிறது. ரமணர் கூட்டத்தால் அவதியுறுகிறார் என எண்ணிய அவரது வட்டம், அவருக்கும் பக்த கூட்டத்துக்கும் இடையே ஒரு தடுப்பை உருவாக்கியது. மேலும் அவரை யாரும் அண்டி விடாத படி, வந்தவர்களை விரட்டி கொண்டிருந்தனர். இதை கண்ட ரமணர் அதிகம் துணுக்குற்றார். அவர்களிடம் கோபித்து கொண்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை...

என்னை நோக்கி வரும் யாவரையும், அருணாச்சல சிவனாகவே பார்க்கிறேன். அவர்களை புறக்கணித்தால், அருணாச்சல ஈசனை புறக்கணித்தது போல் ஆகும். ஆகவே அவர்கள் என்னை வந்து காணட்டும் என கேட்டு கொண்டார்.

ஒரு முறை, ரமணரின் பக்தர் ஒருவர், தீராத வாழ்க்கை நெருக்கடியில், ரமணரை காண வந்தார். வந்தவரை ரமணர் தன்னுடன் இருக்க வைத்து கொண்டார். வந்தவருக்கோ, தவிப்புக்கு மேல் தவிப்பு. பகவானே! நான் அங்கே இல்லை என்றால் யாவும் கை மீறி போய்விடும் என இறைஞ்சினார். ரமணரோ, அமைதியாய் இரு என சொல்லி வந்தார். ஏறக்குறைய பதினைந்து நாளுக்கு பின் அந்த நண்பர் ஊருக்கு அரை மனதுடன் திரும்பினார். என்ன ஆச்சர்யம்?, ஊரில் நிலைமை சீரடைந்து இருந்தது.

ரமணரின் கரம் பற்றி நடந்தால், ஆயிரம் விஷயங்கள். ஆயிரம் ஆச்சர்யங்கள். ராஜு முருகனின் வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன. அடிவானத்தை நோக்கி புன்முறுவலோடு நடக்கும் ரமணரின் கண்களிலும் மெய்தேடல் போதை தட்டுப்படுகிறது.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்