Sunday, April 12, 2009

இனிய சொல், இனிய செயல்


வார்த்தைகள் மனிதன் கண்டறிந்த, மனிதனுக்கு வாய்த்த அரிய வரம். பல நேரங்களில் அதுவே சாபமாய் முடிவது பரிதாபமானது. செய்கைகள், ஒற்றை சப்தங்கள் மூலம் மட்டுமே, மனிதன் தன் எண்ணத்தை சொன்னவன், மொழியை கண்டறிந்து வார்த்தைகளை பிரயோகித்த நிமிடம், மனிதன் அடுத்த தளத்திற்கு தன்னை உயர்த்திய நிமிடமே. சந்தோசம், துக்கம் என மனிதன் வார்த்தை மூலம் வெளிப்படுத்துகிறான். மனித பேச்சுக்களே அற்று போனால், மனிதனும் மரம் போல் எந்த நகர்வும் இல்லாமல் இருந்திருப்பான்.

பல நேரங்களில் நமது காதுகள், நாம் பேசுவதை லயித்து கேட்கிறது. அதன் இனிமையில், இன்னொரு மனிதனின் நேரம் வீணாவதை அறிய முயல்வதில்லை. நிறைய பேசுவதால், என்ன பேசுகிறோம், சரியான வார்த்தை கோர்வைகளா என்பதை கவனிக்க தவறுகிறோம். பல நேரங்களில் எதிராளி முகம் சுளித்த பின்போ, எதிர் தாக்குதலை துவக்கிய பின்போதான், நாம் பேசிய வார்த்தை ஆழம் நமக்கு புலப்படுகிறது. பேசுவதற்கு முன் ஒரு முறை, வார்த்தைகளை மனிதில் ஓடிட விட்டாலே போதும். சரியான வார்த்தைகளை உபயோகிப்பவராய் மாறிப்போவோம். நமது எண்ணமும், செயலும் ஒன்றி போகும்.

ராம கிருஷ்ணா மடத்தை சார்ந்த சுவாமி ரங்கனதானந்தர், தன் வாழ்வில் நடந்த நிகழ்வை விவரிக்கிறார். அந்த நாட்கள் ரங்கனாதானந்தரின் பால்ய பருவம். அப்பொழுது அவருக்கு ஒரு தருணத்தில், மிக அதிகமாக கோபம் வருகிறது. கோபத்தில், எதிரே இருந்த மனிதரிடம், வார்த்தைகளால், மிக அதிகமாக அர்ச்சித்து விடுகிறார். அந்த சமயம், அங்கு வந்த ரங்கனாதானந்தரின் தாய், அதிர்ச்சி அடைந்தவராய், "உனது நாக்கு, கலைமகள் அமரும் இடம். இப்படி நீ சுடு சொற்களை உபயோகித்தால்,. கலைமகள் உன்னை விட்டு நிரந்தரமாய் விலகி விடுவாள்" - என்கிறார். அது முதல் என் வாழ்வில் எத்தனையோ தருணங்களில் அந்த வார்த்தைகள், என் வாழ்வை மாற்றி உள்ளன என நினைவு கூர்கிறார். தாயின் வார்த்தைகள் நிச்சயம் அதித மதிப்பு உடையவையே! தாயின் கனிவும், தொடர் வழி காட்டலும், எத்தனையோ மனிதரை மாற்றி உள்ளன. ஆகவே எங்கும், வார்த்தைகளே வலம் வருகின்றன.

தாயிடம் இருந்து ஒரு நாளும், நீ கெட்டு போவாய் என்ற வார்த்தை குழந்தையை அடைய கூடாது. டி. டி. ரங்கராஜன், ஒருமுறை தன் கருத்தரங்கில் இதை பகிர்ந்து கொண்டார். மனிதன் உடம்பில் இருந்து வெளிப்படும் அத்தனையும், ரத்தம், வியர்வை, கண்ணீர், அனைத்தும், உவர்ப்பு சுவை உடையவையே! மனிதனால், வெளிப்படுத்த முடிந்த தித்திப்பான விஷயம் என்றால் அது நல்ல பேச்சு மட்டும் என்றார். எவ்வளவு நிஜமான வார்த்தைகள்!. ஆகவே நல்ல சொற்களையே தொடர்ந்து பேசுவோம்.

டி. டி. ரங்கராஜன் மேலும் தொடர்கிறார்...
கோபம், வெறுப்பு, மரணம், தோல்வி, பிரச்சனை, பயம், பின்லேடன் என வாக்கியங்களை சிந்தித்து பாருங்கள். அதே சமயம், அன்பு, கருணை, வெற்றி, வலிமை, ஆரோக்கியம், சந்தோசம், புத்தன், கிருஷ்ணன் என வார்த்தைகளை சிந்தித்து பாருங்கள். எதிர்மறை வார்த்தைகளை விட, நேர்மறை எண்ணங்களும், வார்த்தைகளும், பெரிதாய் உள்ளன. ஏன், அவையே வலிமை கொண்டவையாய் உள்ளன. எதை எங்கு தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம்மை பொறுத்த விஷயமே!

இந்த தருனத்தினில் ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. இரு நண்பர்கள் ஒரு பாலைவன பிரதேசத்தில் நடந்து செல்கின்றனர். அந்த தருணத்தில், இருவருக்கும் ஒரு சிறு வாக்குவாதம். அந்த தருணத்தில், ஒரு நண்பன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து விடுகிறான். அடி வாங்கிய மனிதன், மிகவும் வருந்துகிறான். அந்த வருத்தத்துடன், மணலில், "இன்று என் இனிய நண்பன் கன்னத்தில் அறைந்தான்" என எழுதுகிறான்.

அந்த தருணத்தில், ஒரு ஓடை எதிர்படுகிறது., இருவரும், அதில் குளிக்கின்றனர். அந்த நிலையில், கன்னத்தில் அறை வாங்கிய மனிதன், நீரில், மூழ்குகிறான். அந்த நிலையில் மற்றொரு நண்பன் அவனை காப்பாற்றுகிறான். பயத்தில் இருந்து தெளிவு பெற்ற மனிதன், அங்கு இருந்த பாறையில், "இன்று என் உயர் நண்பன், என் உயிரை காத்தான்!" என பொறிக்கிறான்.
அந்த நிலையில், தன் நண்பனின் செயலுக்கு விளக்கம் கேட்பான் நண்பன். நீ முன்பு கன்னத்தில் அறைந்த பொழுது, மணலில் என், செயலை எழுதினாய். இப்பொழுது, பாறையில் பொறிக்கிராயே! என்ன காரணம் என்றான். அப்பொழுது நண்பன், நான் மணலில் எழுதியதை, மன்னிப்பு என்கிற காற்று அழித்து அதன் சுவடே இல்லாமல் செய்து விடும்!
ஆனால் ஒரு நல்ல செயல் நடந்து இருந்தால், அதை கற்களில் பொறிக்க வேண்டும். ஏனெனில், எந்த காற்றும், அதை எந்நாளும், அழித்து விடாது. நல்ல செயல்கள் அப்படி தான். நம் மனமாகிய நந்த வனத்தில் எந்நாளும் அழியா வண்ணம் பொறித்து இருக்க வேண்டும்!
.

2 comments:

Anonymous said...

இரு நண்பர்களின் கருத்து வேறுபட்டால் நடந்த நீகழ்ச்சி எளிதாக புரியும் வண்ணம் இருந்தது.
மனித வாழ்வில் வார்த்தைகலை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதும். நம் பிறரிடம் வார்த்தைகலை பயன் படுத்தும் போது மற்றவர் மனம்நோகமல் இருக்க வேண்டும்.நம் சுக துக்கங்கலை கண்டு மனசலனம் ஏற்படமல் நம் மனதை கடுபடுத்த.

by Natarajasivam

Anonymous said...

ஒரு மனிதனின் வாழ்வில் முன்னேர அடித்தளமா இருபது உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மதிப்பு உண்டு.நல்ல செயல் நல்ல எண்ணம்
கொண்ட எல்லாரும் முனரலம் வெற்றியைநோகி


இவன்

நடராஜசிவம்

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்