சமீபமாய் தினமும் தொண்ணுறுகளின் நாட்கள் ஏதோ ஒரு வகையில் நினைவுக்கு கொண்டுவரப்படுகின்றன. ஆயிரம் தான் இருந்தாலும், எங்க காலம் மாதிரி வருமா? என்ற அங்கலாப்பு அனைவருக்கும் உண்டு. அப்படியான என் nostalgic பயணம் இங்கே. அன்றைய கமர்கட், தேன் மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், பூமர், சுத்துற மிட்டாய், HMT கடிகாரத்தின் பொருட்டு சேகரித்த க்ளோப் தீப்பெட்டி அட்டைகள் என இவை தாண்டி பின்னோக்கிய பயணம் இங்கே ..
அன்றைய நாள் வார ஏடுகள்:
அன்றைய வார ஏடுகள் இன்னும் கண்ணில் மின்னுகின்றன. அன்றைக்கு வந்த எல்லா வார பத்திரிக்கையிலும் தவறாமல் தொடர்கதைகள் ஆக்கிரமித்திருந்தன; கல்கி இதழில் தவறாமல், அட்டகாசமான படங்களுடன் தொடர்ந்து பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு தொடர்ந்தது. விகடனும், குமுதமும் தொடர்ந்து தொடர் கதைகளை வெளியிட்டன. நிச்சயம் அந்த கணங்கள் உவப்பானவை; என் ஞாபகத்தில் தொண்ணுறுகள் இறுதியில், இரண்டாயிரம் துவக்கத்தில் இந்த போக்கு இருந்தது. இன்றைய இதழ்கள் ஒற்றை சிறுகதையுடன் முடித்து விடுகின்றன.நிரம்பவே ஏமாற்றம்.. அன்றைய நாள் இந்திய டுடே அருமை. அன்று தேடி படித்த சாம்பியன் புத்தகம், ஸ்போர்ட்ஸ் ஸ்டார், அம்புலி மாமா, கோகுலம், சிறுவர் மலர் யாவும் பொக்கிஷங்கள். அன்றைய விகடனில் வந்த அரட்டை - அணு, அக்கா, ஆன்டி, குமுதத்தில் வந்த ராட் க்ரிஷ் அரட்டை இன்னும் நினைவில் உள்ளது.
வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜன்
சுஜாதா - பூக்குட்டி, யவனிகா, இரண்டாவது காதல் கதை, கற்றதும் பெற்றதும், சுஜாதாட்ஸ், ஏன் எதற்கு எப்படி., இன்னும் பல..
வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்.,
பாலகுமாரன் - அப்பம் வடை தயிர்சாதம்.
ஸ்டெல்லா புரூஸ் - மாய நதிகள், குமாரசாமி mbbs பெண் தேடுகிறான்
பாஸ்கர் சக்தி - ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்
பிரபஞ்சன் - கனவுகளை தின்போம்
சுபா - கண்மணி சுகமா ?
மடிசார் மாமி
ரவிக்கந்தன் - லவ் 2K
தமிழருவி மணியன் - ஊருக்கு நல்லது சொல்வேன்
எஸ்.ராமகிருஷ்ணன் - துணை எழுத்து
ஹாய் மதன்
நானும் விகடனும்
இனிக்கும் இலக்கியம் - தமிழண்ணல்
சங்க சித்திரங்கள் - ஜெய மோகன்
க சி சிவகுமார் - ஆதிமங்கலத்து விசேஷங்கள்
ராஜேஷ் குமார் - கொஞ்சம் மேகம், கொஞ்சம் நிலவு.
இந்திரா பார்த்தசாரதி - கிருஷ்ணா கிருஷ்ணா
க்ரேஸி மோகன் - அமெரிக்காவில் கிச்சா
ரா கி ரங்கராஜன் - நான் கிருஷ்ண தேவராயன்
அன்றைய விளம்பரங்கள்:
ராஜேஷ் குமார் - கொஞ்சம் மேகம், கொஞ்சம் நிலவு.
இந்திரா பார்த்தசாரதி - கிருஷ்ணா கிருஷ்ணா
க்ரேஸி மோகன் - அமெரிக்காவில் கிச்சா
ரா கி ரங்கராஜன் - நான் கிருஷ்ண தேவராயன்
அன்றைய விளம்பரங்கள்:
அன்றைய விளம்பரங்கள் சாமானியரை கொள்ளை கொண்டவை. காற்றின் வண்ணங்களை வார்த்தைகளால் , இசையால் நிரம்பியவை. அன்றைய பெப்சி விளம்பரம் மறக்க முடியாதது. 96 உலக கோப்பையை முன்னிட்டு அது எடுக்கப்பட்டது;
(இந்த விளம்பரம் சலிக்காமல் பார்த்த ஞாபகம் - சச்சின் )
தொடர்ந்த பூஸ்ட் விளம்பரம் (முன்பு கபில் - சச்சின், பின் சச்சின் சேவக், பின் தோனி )
ஒவ்வொரு புது சோப்பு விளம்பரத்தை பார்த்து ஒவ்வொரு சோப்பை உபயோகித்து மகிழ்ந்தோம்; அவர்களும் நம்மை அப்படியே நம்ப வைத்தனர்;
தொடர்ந்த பூஸ்ட் விளம்பரம் (முன்பு கபில் - சச்சின், பின் சச்சின் சேவக், பின் தோனி )
ஒவ்வொரு புது சோப்பு விளம்பரத்தை பார்த்து ஒவ்வொரு சோப்பை உபயோகித்து மகிழ்ந்தோம்; அவர்களும் நம்மை அப்படியே நம்ப வைத்தனர்;
சொட்டு நீலம் - ரீகல், உஜாலா - நீயும் உஜாலாவுக்கு மாறிட்டாயா ? நானும் உஜாலாக்கு மாறிட்டேன்...
நிர்மா
பஜாஜ் ஸ்கூட்டர்
லிரில்
காம்பிளான் - நான் வளர்க்கிறேன் மம்மி
பெப்சி, கோக், ரின், ஹமாம், சந்தூர், சந்திரிகா ,
கோகுல் சாண்டல்
கோகுல் சாண்டல்
மிராண்டா, ஒனிடா
கண்ணன் ஜூப்ளி காபி - ரஹ்மானின் தெளிந்த/மயக்கும் இசை.. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.
நரசுஸ் காபி - பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு
கவர்ந்த தொலைக்காட்சி தொடர்கள்:
அன்றைய நாள் தொலைக்காட்சி DD யில் தொடங்கி DD யில் முற்று பெற்றது. கிரேஸி மோகனின் அத்தனை நாடகங்களும் அற்புதமானவை. அனைத்து சுதந்திர தினத்திலும் ரோஜா படம் கட்டாயம் இடம் பெறும். திரை மாலை, எதிரொலி, கண்மணி பூங்கா, வயலும் வாழ்வும் தாண்டி அன்றைய விருப்ப தொடர்கள்:
1. என் இனிய இயந்திரா- நாவல் தொடர்
2. அம்மாவுக்கு கல்யாணம்
3. பொன் விலங்கு - நாவல் தொடர்
4. இரும்பு குதிரைகள் - நாவல் தொடர்
5. இது ஒரு மனிதனின் கதை - நாவல் தொடர்
6. நெஞ்சினலைகள் - நாவல் தொடர்
7. ஸ்ரீ கிருஷ்ணா
8. அம்பிகாபதி
9. இருட்டிலே தேடாதீங்க
10. துப்பறியும் சாம்பு
11. மால்குடி டேய்ஸ்
12. கிருஷ்ணா லீலா தரங்கிணி
13. டாக்சி டாக்சி
14. மேல் மாடி காலி
15. சந்திர காந்தா
16. ஜுராசிக் பேபி
17. சங்கர்லால் துப்பறிகிறார்
18. தாயுமானவன் - நாவல் தொடர்
19. ரமண மகரிஷி - வாழ்வு
20. சாணக்யா
21. அக்பர் தி கிரேட்
22. சின்ன சாம்பு
23. தினேஷ் கணேஷ்
24. அடடே மனோகர்.
25. ஆலிஃப் லைலா
23. தினேஷ் கணேஷ்
24. அடடே மனோகர்.
25. ஆலிஃப் லைலா
25. கள்வனின் காதலி - - நாவல் தொடர்
26. வசந்தம் காலனி
27. here is crazy 28. வாஷிங்டனில் திருமணம் - சாவியின் நாவல் தொடர்
29. மின்னல் மழை மோஹினி - ஜாவர் சீதாராமன் தொடர்.
30. திருக்குறள் கதைகள்
31. ஜெய் ஹனுமான்
32. நான் தில்லி நகரம்
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்