Thursday, October 15, 2009

மத்தாப்பு தருணங்கள்:



பதிவர் உலகில் அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வு என்றென்றும் ஒளியின்  இயல்பை உடையதாய் மாறட்டும். வாழ்வு என்றெல்லாம், எந்தெந்த நிமிடங்களில்  களிப்பு தருகின்றதோ, அதெல்லாம் மத்தாப்பு தருணங்கள்.

வாழ்வின் நீண்ட பயணத்தில் பண்டிகைகள், வாழ்வை நேசிக்கவும், சக மனிதனை, உற்றார் உறவினரை புரிந்துகொள்ளவும், கற்று தருகின்றன . வாழ்வு நதி தரும் களிப்பில், அடுத்து வரும் நாட்கள் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. மனம், அந்த அழகிய நிமிடங்களை, தன் வசீகர முந்தானையில் முடிந்தபடி செல்கிறது. அடுத்த பண்டிகை வரையில் இந்த தித்திப்பு போதும்.

எல்லா வயதினருக்கும் தீப திருநாள் - ஓர் நினைவு தேடலும், பொக்கிஷமும் கூட.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்