சில சமயம் கவிதைகளை முயற்சித்து பார்ப்பது வழக்கம். மிக மிக அரிதாய் சில நல்ல விஷயங்களும், சில அபத்தங்களும் வந்து விழும். இதோ அவற்றில் ஒரு சில ..
இமைகொட்டும் விண்மீன்கள்
"இலையில் சிதறும் மழைத்துளி
இமைகொட்டும் விண்மீன் சிதறல்
தூரிகை தூவும் வர்ணச்சிதறல்
தூவானம் தூவும் எல்லையிலா வானம்
பால்கொட்டி உலாவரும் வெள்ளி நிலா
பனிதூவி தேவார துயிலெழுப்பும் மார்கழி காலை
இமைபிரித்து உலகறியும் மழலையின் மந்தகாசம்
இதயம் வருடி இதம்கூட்டும் குழலோசை
இறையின் திருமுன் அமர்ந்து தவமியற்றும் ஒற்றைப்பூ
இன்னிசை பாடிடும் புல்லினக்கூட்டம்
ஜதிகூட்டும் காட்டாற்று புதுவெள்ளம்
ஜாலம் காட்டும் காட்டு மின்மினி
மகரந்தம் தூவும் மலர்ச்சரம்
மண்மீது துளிர்க்கும் ஒற்றைத்தாவரம்
தேன்குடித்து மயங்கி கிடந்த ராணி பட்டாம்பூச்சி
தின்று தித்தித்து இன்னும் கேட்ட திணை மாவு
பால் தேடி ஓடும் பாப்பா கன்றுக்குட்டி
கால் தொட்டு வளைந்து ஓடும் ஆட்டுகுட்டி
கதைகேட்க நீ! கதை சொல்ல நான்!
பகல்களும், இரவுகளும் போதவில்லை!
நினைத்து சிரிக்கவும், கனவில் மிதக்கவும்.. "
அருவி
அரிதாகவே அகப்படுகின்றன
கத்தும் குருவியும்
கொட்டும் அருவியும்!
.
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்