Sunday, May 3, 2009

அடப்பாவமே! இப்படியுமா!


ஒரு சிறிய கதை - என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது. அதன் பகிர்வு இங்கே ...
அது ஒரு மாலை நேரம். இது ஒரு பொன் மாலை பொழுது - நிழல்கள் பட பாடல் போல் தான். ஏன், "ஒரு மாலை இளவெயில் நேரமாக " சூர்யா பாடி வைத்தது போல் கூட இருக்கலாம்.

கணவன், தன் வீடு திரும்பும் வழியில் , மனைவியையும் அழைத்து செல்லும் முனைப்பில், மனைவியின் அலுவலகம் வருகிறான். அந்த நேரம், மனைவி வந்த பாடில்லை. எனவே காரை ஓரமாக நிறுத்தியபடி காத்து இருக்கிறான். பொழுது போகாததால், சற்றே, தன் காரை துடைத்தபடி உள்ளான். அந்த தருணத்தில், ஒரு பிச்சைக்காரன், அருகே இருந்த, திண்ணையில் அமர்கிறான். அந்த தருணத்தில், அந்த மனிதனின் நிலையை பார்க்க பரிதாபமாய் உள்ளது. அங்கங்கே கிழிந்து தொங்கும் உடைகள்! அழுக்கேறிய தோற்றம்!

அந்த பிச்சைக்காரன், சற்றே தயக்கத்துடன், காரில் வந்த மனிதனிடம், பிச்சை கேட்கிறான். சற்றே யோசித்த கார் மனிதன், தன் சட்டை பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை அளித்து புகைக்க சொல்கிறான். அதை வாங்க மறுத்த பிச்சை காரன், ஐயா புகை பிடிப்பதால், புற்று நோய் வரும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்றான்.

சரி அதை விடு என கூறியவன், தன் காரில் இருந்து மது புட்டியை எடுத்து, இந்தா! இதை வைத்து கொள். இன்றைய பொழுதை இன்பமாக கழி! என்றார். அதற்கு பிச்சைக்காரன், அய்யா, நான், மது அருந்துவதில்லை. நீங்கள் அறியாததா! மது அருந்தினால், குடல், கல்லீரல் இவை பாதிக்கும். முடிவில், உடல் சீர்குலைந்து விடும் என்றான்.

அவனது பதிலில் திருப்தி அடைந்த கார் மனிதன், சரி, என்னிடம், பணம் உள்ளது. இருவரும் பந்தய சாலையை அடைவோம். என்னிடம் உள்ள எல்லா பணத்தையும் வைத்து, குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவோம் என்றான். அதற்கு பிச்சை காரன், அய்யா, சூதாடுவது குற்றம். அதை, என்னை செய்ய சொல்கிறீர்களே! என்றான்.

அந்த நிலையில், பிச்சைகாரனின் நிலை - இவன் ஏதாவது தர்மம் செய்வானா என்பதே! அந்த நிலையில், கார் மனிதன், நீ எங்களுடன் வரவேண்டும் என்கிறான். பிச்சைக்காரன், குழம்பியவனாய் பார்க்க, என் மனைவி, எப்பொழுதும், புகைப்பது, மது அருந்துவது, சூதாட்டம் பழக்கம் இல்லாத மனிதனை பார்க்க வேண்டும் என்று உள்ளாள். என்னையும் அப்படி இருக்க வேண்டும் என சொல்லி வந்தாள். அப்படி நான் இருந்தால், எப்படி இருப்பேன் என்பதை காட்ட தான் உன்னை என்னோடு அழைத்து செல்கிறேன் என்றான்.
.
.
.

3 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

இந்தக்கதையின் நிறைவினை இப்படியும் கூறுவதுண்டு,


மனைவியிடம் சென்று இவனை அறிமுகம் செய்து வைத்தானாம் கணவன். அப்போது மனைவி கேட்டாளாம் நீ ஏன் பிச்சைக்ககாரனானாய் என்று அதற்கு அவன் கூறினானாம்

உன் கணவருக்கு இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களும் தான் நான் இப்படி ஆகக் காரணம் என்று....

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

THIRUMALAI said...

முனைவர்.இரா.குணசீலன், தமிழினி - பதிவிற்கு வந்தமைக்கும், தங்கள் பின்னுட்டம் இட்டமைக்கும் நன்றிகள் பல!

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்