இதோ இந்த வாரத்துடன், கெளதம் கம்பீர் அவர்களின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது. அருமையான ஒப்பனராகவும், கிரிக்கெட்டின் அனைத்து விதமான வடிவங்களில், தன் தனி முத்திரையை பதித்தவர். அவரின் அருமையான ஆண்டு 2008. 2009 ஆம் ஆண்டில் தனி முத்திரையுடன் ஐசிசி விருதை(சிறந்த டெஸ்ட் வீரர் விருதை) பெற்றார். அந்த ஆண்டு அவர் தொட்டதெல்லாம் பொன்னானது.
களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதில், இக்கட்டான தருணத்தில் அணியை மீட்பதில், இவருக்கு இணை யாருமில்லை. இந்தியா பெற்ற அருமையான வெற்றிகளில், பிறரின் ஆட்டத்தில், காம்பிர் மறைந்து போனார். ஆனால் அவரில் ஆட்டம் மறக்க முடியாதது. விலை மதிப்பற்றது; அவரின் துணிச்சல் பிறரும் பின்பற்ற வேண்டிய அம்சம். இரண்டு ஐ பி எல். தொடர்களில், கேப்டனாக கொல்கத்தாவுக்காக கோப்பையை வென்று தந்தவர். சற்றே தாமதமாக அணிக்குள் வந்து, தன் இடத்தை தக்கவைத்து கொண்டவர். திடீர் பார்ம் சரிவும், அணிக்குள் இருந்த புகைச்சலும், அவரை திடீரென ஓரம் கட்டியது காலத்தின் மறையாத கோலம்.
அவரின் சிறந்த ஆட்டங்கள்:
1. 2007 - டி 20 இறுதி ஆட்டம்
2. 2011 - உலக கோப்பை இறுதி ஆட்டம்
3. நியூசிலாந்து டெஸ்ட் தொடர். - 2009
4. ஆஸ்திரேலியாவின் இந்திய டெஸ்ட் தொடர் - 2008
5. 2011 - உலக கோப்பை - காலிறுதி ஆட்டம் - இந்தியா ஆஸ்திரேலியா
மிக குறுகிய ஆண்டுகளே விளையாட முடிந்தாலும், பல வடிவங்களில், பத்தாயிரம் ரன்களை தொட்ட கம்பிர் சாதனைகள் கொண்டாட பட வேண்டியதே. அவரே அரிய சாதனை நாயகன். தனக்கு கொடுத்த ஆட்ட நாயகன் விருதை, அன்றைய இளம் வீரர் கோலிக்கு(விராட் கோஹ்லி ) கொடுக்க சொன்ன அவரின் இதயம் மகத்தானதே. வாழ்த்துக்கள் காம்பிர். ஒரு நாள் நீங்களும் அணியை வழி நடத்துவீர் என எதிர்பார்த்தோம். அவ்வளவே!!!
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்