எஸ். ராமகிருஷ்ணன் - பேச்சு (குற்றமும் தண்டனையும்) (தஸ்தாயெவ்ஸ்கி)
சமீபத்தில் ஓர் இனிய சொற்பொழிவின் தொகுப்பை காணொளியாக காண கிடைத்தது. அது எஸ். ரா. அவர்கள், ருஷ்ய பண்பாட்டு கழகத்தில் நடத்திய தொடர் சொற்பொழிவின் ஒரு பகுதி. அட்சரம் வெளியீடாக அது தனி தனியே வெளி வந்து இருக்கிறது. வெகு நாட்களாக அவரின் பத்தியை வாசித்ததில் இருந்து, இந்த பேச்சை காண ஆவல் கொண்டேன்.
அவரது முந்தைய பேச்சு, டால்ஸ்டாயை பற்றி இருந்தது. எனக்கு பார்க்க கிடைத்தது, அவரின் (குற்றமும் தண்டனையும்) (தஸ்தாயெவ்ஸ்கி) பற்றிய பகுதி மட்டுமே. எஸ். ரா. அவர்கள்,தஸ்தாயெவ்ஸ்கியின் மிக பெரிய உபாசகர். தன வாழ்வு எங்கும், யெவ்ஸ்கியும், அவரின் தனித்த எழுத்தும் பின் தொடர்வதாக சொல்கிறார் . யெவ்ஸ்கியை, அவரின் மூல எழுத்து எப்படி இருக்கும் ; அதை வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் ரஷ்ய மொழி படிக்க முனைந்தவர் அப்படி ஒரு மலைப்பு அவருக்கு. யெவ்ஸ்கியை தொடரும் நிறைய பேர் அப்படி இருப்பது அவரின் பெரிய வெற்றி தான். அவரின் மனதிற்கு மிக மிக நெருக்கமானவராக தஸ்தாயெவ்ஸ்கி இருந்திருக்கிறார்.
எஸ். ரா. அவர்களின் வலை மனையில் உள்ள நிறைய பத்திகள் யெவ்ஸ்கியை கொண்டாடி தீர்க்கின்றன.
அவரது இந்த பேச்சு ஓர் அழகான பயணம். நாம் அவரின் கைகளை பற்றியபடி பயணிக்கிறோம்.
டால்ஸ்டாய, யெவ்ஸ்கி இருவரும் ஒரே காலத்திய ரஷ்ய எழுத்தாளர்கள். இருவரும் கடைசி வரை பார்த்து கொள்ளவே இல்லை. டால்ஸ்டாய், செழிப்பான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். யெவ்ஸ்கி - அதற்க்கு நேர் எதிர் துருவம் வாழ்வில் விதி அவரை துரத்தி துரத்தி அடித்தது கதறி கதறி அழ வைத்தது. யெவ்ஸ்கியின் கதை உலகம், ஒளியும் அதை ஒட்டிய இருளுமாய் இருந்தது.
எஸ். ரா. எழுத்து மூலமே, எனக்கு "இடியட்", 'வெண்ணிற இரவுகள்', "கார்மசெவ் சகோதரர்கள்" என யெவ்ஸ்கி மெல்ல அறிமுகம் ஆனார் .
எஸ். ரா. அவர்களின் பேச்சுக்கு வருவோம்.யெவ்ஸ்கி பற்றிய அவரின் அறிமுகம் அவ்வளவு அருமையாக இருந்தது. யெவ்ஸ்கி - தன வாழ்வில் பட்ட அவமானம், துயர், வலி, நோய்மை , புறக்கணிப்பு இவை அவரின் நாவல்களில் பிரதிபலிக்கிறது. அவரின் வாழ்வையும், எழுத்தையும் நம்மால் பிரித்தறிய முடியாது போலும். அவர் வாழ்வையே கதாபாத்திரங்களூடே நாவலை படைத்து சென்றுள்ளார்.டால்ஸ்டாய, யெவ்ஸ்கி இருவரும் ஒரே காலத்திய ரஷ்ய எழுத்தாளர்கள். இருவரும் கடைசி வரை பார்த்து கொள்ளவே இல்லை. டால்ஸ்டாய், செழிப்பான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். யெவ்ஸ்கி - அதற்க்கு நேர் எதிர் துருவம் வாழ்வில் விதி அவரை துரத்தி துரத்தி அடித்தது கதறி கதறி அழ வைத்தது. யெவ்ஸ்கியின் கதை உலகம், ஒளியும் அதை ஒட்டிய இருளுமாய் இருந்தது.
எஸ். ரா. எழுத்து மூலமே, எனக்கு "இடியட்", 'வெண்ணிற இரவுகள்', "கார்மசெவ் சகோதரர்கள்" என யெவ்ஸ்கி மெல்ல அறிமுகம் ஆனார் .
அவரின் வலிப்பு நோய், அவரின் பண பிரச்சனை, நெருங்கிய மரணம், சூதாட்டங்கள், அதற்கு இடையிலான அவரின் எழுத்து , சைபீரிய சிறை வாழ்வு, மரணம் வரை சென்று மீண்டது என அவரின் வாழ்வை அழகாக நம் முன் விவரிக்கிறார். கணக்கில் அடங்கா திருப்பங்கள் கொண்டதே யெவ்ஸ்கி வாழ்வு. எஸ் ரா அவர்களின் ஞாபக கித்தான்கள், ஒரு மிக நீண்ட வாழ்வை நம் முன் திரை இடுகின்றன.
குற்றமும் தண்டனையும் என சொல்லும் போது நம் முன் அரசர்கள் எப்படி எல்லாம் தண்டனை தந்தனர் என பட்டியல் இடுகிறார். மனிதன் குற்றம் புரிய காரணம் தேடுவதும், அதை நியாய படுத்துவதும் ஒரு கலையாகவே வளர்ந்து வந்துள்ளது. அன்றைய நாளில் கூட சீட்டு கம்பெனி நடத்தும் ஒரு பேராசிரியர் இருந்துள்ளார்.
அவரின் இந்த கவித்துவமான பேச்சுக்கு நன்றி.. !!!
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்