இன்றைய நாட்களில் காந்தியை நாம் எப்படி பார்கிறோம்? நமக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் காந்தி தான் காரணம்.. காந்தி மட்டும் இல்லாமல் இருந்துருந்தால் நாம் நன்றாக இருந்து இருப்போமா?
நம் முன் உள்ள பெரிய கேள்வி இது. வசூல் செய்ய முடியாத கணக்கை எல்ல்லாம் நாம் காந்தி கணக்கு என முத்திரை குத்தி விட்டோம். திரை அரங்கில் எப்போதெல்லாம் காந்தியை காண முடிகின்ற பொழுதுகளில் நாம் விசில் அடித்து நம் மரியாதையை காண்பிக்க ஒருபோதும் தவறுவதில்லை.
காந்தி நம்மை விட்டு விடை பெற்று அறுபத்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் நாம் செய்கின்ற அத்துனை தவறுகளுக்கும் காந்தியை பொறுப்பாக்குகிறோம். கவிஞர் மேத்தா அவர்கள் தன கண்ணீர் பூக்கள் எனும் நூலில் ஒரு கவிதையை வைத்தார். "தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி" என்பதே அது.
போகிற போக்கில்
எங்கள் பிறந்த நாள் உடையே
எங்கள் தேசிய உடையாக
மாறிவிடுமோ ?
மகாத்மாவே உன்னை ஒரு வகையில்
அப்படியே பின்பற்றுகிறோம்
அரைகுறையாக தான் உடுத்துகிறோம்.
எங்களுக்கு தங்கமும் வெள்ளியும்
விழாக்களின் பெயரில் தான்
கிடைக்கிறது.
திறந்து விடப்பட்டு தண்ணீர் எல்லாம்
பள்ளங்களை ஏமாற்றி விட்டு
மேடுகளை நோக்கியே பாய்கின்றன
என்றார்.
அன்று எழுதிய வரிகளில் பெரும் மாற்றம் எதுவும் இன்று இல்லை. ஆனால் மற்றவர்கள் காந்தியை கொண்டாடிய அளவுக்கு, புரிந்து அளவுக்கு நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே அது . மார்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை அவர்களின் அத்தனை போராட்டத்திற்கு பின்பும் அவர்களின் ஆதர்ஷம் காந்தி தான்.
பாரதி இப்படி தான் காந்தியை எழுதினான்..
வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வு உற்று, வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க.
என்றே முண்டாசு கவிஞன் கொண்டாடுகிறான்.
காந்தி ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வந்த விஷயம் இரண்டு.
அவை அவரின் பெரிய கனவு.. ஒன்று ராம ராஜ்ஜியம். மற்றது கிராம ராஜ்ஜியம். அவை இரண்டும் இன்றும் கானல் நீராகவே உள்ளன.
கலாம் தன்னுடைய தென் ஆப்பிரிக்க பயணத்தில் நெல்சன் மண்டேலாவை சந்தித்து இருக்கிறார். அதே போல் அவர் இருபத்து ஆறு ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ராபின் தீவு அறையை கண்டு வந்து இருக்கிறார். இந்த சின்ன அறையில் இவ்வளவு கடின வாழ்கையை எதிர்கொள்ள எது உங்களுக்கு துணையாய் இருந்தது என கலாம் கேட்க அவர் சொன்ன பதில் "மகாத்மா காந்தி!"
மண்டேலா மறைவுக்கு கலாமின் இரங்கல்களும் அவரின் நினைவும் இங்கே..
http://www.dnaindia.com/india/report-for-nelson-mandela-gandhi-was-an-anti-apartheid-icon-apj-abdul-kalam-1930708
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்