சுஜாதா அவர்களின் நினைவு நாள் இன்று.. அவர் மறைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கும் பொழுது மலைப்பாய் இருக்கிறது.. அவரது ஆளுமை, அவர் இயங்கி வந்த நான்கு உலகுகள்[ பத்திரிகை, சினிமா, கணிப்பொறி, எலக்ட்ரனிக்ஸ் ] அவரது பன்முக புலமையை சொல்லி செல்லும்.. புது படைப்பாளியை அறிமுகம் செய்வதாகட்டும், ஆண்டு தோறும், விருதுகள் வழங்குவதில் ஆகட்டும், அவரது இயக்கம் மிக அதிகமாக கவனிப்புக்கு உள்ளானது..
அவர் மறைந்த பின், வந்த பதிவுகள், அவரின் பயண எல்லையை, எத்தனை மனிதர்களின் நேசிப்புக்கு உள்ளானவர் என்பதை தெளிவு படுத்தியது.. தொடர்ந்து விகடன் வாசிக்க ஆரம்பித்த பின் அவரது கற்றதும் பெற்றதும் தொடரை விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன். விகடனை வாங்கிய பின், மனம் இரண்டு பகுதிகளை தேடும்... ஒன்று கற்றதும் பெற்றதும்.. மற்றொன்று ஹாய் மதன்! பகுதி.. இன்று வரை பின்னது தொடர்கிறது.. இரண்டு வருடங்களுக்கு முன், தற்செயலாக கற்றதும் பெற்றதும் தொடர் நின்றது.. சரி சில நாட்கள் விட்டு பின், தொடர்வார் என எதிபார்த்தேன்..
முன்னரும் இப்படி நிகழ்ந்து உள்ளது.. பின் அவரே அந்த பகுதியில், அதற்கான காரணத்தை விவரிப்பார்.. இடையே ஒரு முறை, கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு, அதன் பின் சரியாகி வந்து நகைசுவையோடு[ விஷ்ணு பரமாத்மாவின் காட்சி ] தனக்கு நிகழ்ந்ததை எழுதினார்..
ஆனால், பிப்ரவரி இறுதியில், தொலைகாட்சியில், ஓடிய குறுஞ்செய்தி அதிர்ச்சியை கொண்டு வந்தது.. அருகே இருந்த நண்பர் சுஜாதா போய்விட்டார்... இனி சங்கர் யாரை கொண்டு ரோபோ செய்ய போகிறார் என வினா எழுப்பினார்.. அவரது எழுத்து நடை எள்ளல் தொனியோடு, அட நாமும் எழுதலாமே என ஊக்கம் தந்தது..
அவர் தொட்டு செல்லும் கவிதைகள், புத்தகங்கள், சினிமா.. எழுத்தாளர் அதிக கவனத்துடன் பிறரால் நோக்கப்பட்டது..
அவரது மறைவுக்கு பின் அவரின் ஆத்ம தேசிகன், மூலம் அவரை பற்றி அதிகம் அறிய முடிந்தது.. குமுதத்தில் வந்த அவரது வாழ்க்கை பதிவுகள் ஒரு அறிய தொகுப்பாய் இருந்தது.. அவரது வாழ்வோடு அற்புதமாய் தொடர் பயணித்தது..
அவரது ஸ்ரீரங்கத்து நினைவுகள், அரங்கன் பேரில் கொண்ட ஈடிணை அற்ற அன்பு, அவரின் செயின்ட் ஜோசெப் நினைவுகள், அவர் மேற்கொண்ட பயணங்கள் இவையாவும் அற்புதங்கள்.. அவரின் எழுத்து நடை சம காலத்தில், நிறைய பேரை எழுத்துக்கு எடுத்து வந்துள்ளது.. அவரின் அறிவியல் விளக்கங்கள், ஏன்.. எதற்கு தொடர்கள் அற்புதமாய் வந்தன..
தொலைகாட்சியில் வந்த ஜீனோம்.. அவரின் அற்புத கற்பனை உலகம்.. வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உவப்பானவை அவரின் படைப்பு உலகு.. அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு இன்னும் ஞாபகம் உள்ளது.. அவர் மணிரத்னத்துடனும், ஷங்கருடனும் பணியாற்றியது தமிழ் சினிமா செய்த புண்ணியம்.. அவரின் வசனங்களின் தீவிர ரசிகன் நான்.. வணிக நோக்கம் இன்றி அவரை இன்னும் அதிகமாய் உபயோகித்து இருந்திருக்கலாமோ என இன்றும் என்ன தோன்றுகிறது.. கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் வரும் மாதவன் எதோ சுஜாதாவை போல் அவரின் நேர் குரல் போல் ஒத்து இருந்தார்..
கல்லூரி நாட்களில் அவரின் கற்றதும் பெற்றதும் தொடரின் இரண்டு பாகங்கள்
என்னை போல் பிறராலும் நேசிக்க பட்டது.. அவரது எழுத்துக்களுக்கு எதிப்பு வந்த நாட்களில், அவரின் வருத்தத்தை தெரிவிப்பார்..
சுஜாதா ஒரு பேட்டியில்..
1 ) நீங்கள் ஏன் நிறைய சரித்திர கதைகள் எழுதுவதில்லை?
நான் சரித்திரத்தில் ரொம்ப வீக்.. எஸ். எஸ். எல். சி யில் என் மார் நாற்பது..
2 ) நீங்கள் எப்பொழுது எழுதுவதை நிறுத்துவீர்கள்?
நடுராத்திரி சரியாய் பனிரெண்டரைக்கு..
தன எழுபதாவது பிறந்த நாளுக்கு வந்த அனைத்து வாழ்த்துக்களை அன்புடன் நன்றி சொன்னவர் .. அந்த தருணத்தில் தான் அவருக்கு எழுபதா என தோன்றியது.. அவரது எழுத்து எப்பொழுதும் போல் புத்திலமையோடு நொப்பும் நுரையுமாய் பெருகும் காட்டு ஆற்று பெருவெள்ளமாய் வந்து கொண்டிருந்தது.. முதுமை அவரின் உடல் உணர்ந்திருக்க கூடும்.. மனம் அதை உணரவில்லை..
அவரின் பிரிவோம் சந்திப்போம் புதினத்தை திரைப்படமாய் ஆனந்த தாண்டவம் என எடுத்த பொழுது அகமகிழ்ந்தேன்.. அவர் தன படைப்பு சினிமாவை வரும் தருணங்களில், அதிகம் பயமடைந்து இருக்கிறார்.. ஒரு பிற மொழி படத்தில் அவர் கண்ட காட்சி.. [ எண்ண என் கதைப்படி இது எல்லாம் இல்லையே என்று பரிதாபமாய் கேட்ட அவர்.. ] அவரின் சிறுகதை அற்புதமான நடை, அவரின் கணிப்பொறி கட்டுரைகள் ஒரு வரப்பிரசாதம். அவரின் தேஜஸ்வினி கதாபாத்திரத்தை இன்னமும் சமூகத்தில் தேடி கொண்டுள்ளேன்..
ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொடரில் வந்த குண்டு ரமணி, இன்னும் மனதை எதோ செய்தபடி உள்ளது.. அவர் உயிர் பிரிந்த தருணங்களில் அவரின் பிரிய தேசிகன், அவருக்கு பிடித்த பிரபந்தங்களை படித்தார் என கேள்வி பட்டேன்.. அந்த அரங்கனின் திருவடிகளையே அவர் தொட்டு இருப்பார் என நம்புகிறேன்.. அவரின் எழுத்துக்கள் எப்பொழுதும் போல் அற்புத ஜீவிததொடு வாழும்..
.
.
6 comments:
என்றும் இருப்பவர்தானே என்றிருந்தோம் , அவர் விட்டு சென்று வருடங்கள் இரண்டாகிவிட்டது . என்றென்றும் நம் எழுத்திலும் , வாசிப்பிலும் என்றுமே நம்மோடு இருப்பார் -- பதிவிற்கு வாழ்த்துக்கள் .
அவர் என்றும் நம்மோடு இருப்பார். உண்மை. அருமையான கருத்துக்கள். நல்ல நினைவூட்டல். வாழ்த்துக்கள்.
நிச்சயம் சுஜாதா மறையவில்லை அவர் நம்மோடு அவர் எழுத்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
நினைவுகளுக்கு நன்றி...
பதிவை பார்தவர்க்கும், கருத்துக்களை பகிர்ந்தவர்க்கும் நன்றிகள்.. இந்த நாளில் சுஜாதாவை பற்றி சிந்திக்க நேரம் கிடைத்ததற்கு, மற்றவருடன் பகிர்ந்து கொள்ள அமைந்த சந்தர்ப்பத்துக்கும் நன்றி..
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்