Sunday, August 19, 2012

கோவை புத்தக திருவிழா - 2012.

இன்று கோவை புத்தக திருவிழாவுக்கு சென்று வந்தேன். இது தற்பொழுது கைத்தறி மைதானத்தில் நடக்கிறது. சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு அதிக ஸ்டால்கள் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒருவரின் உரை  இடம்பெறுகிறது. இன்று "அள்ள அள்ள பணம்"  - புகழ் சோம. வள்ளியப்பனின் உரை இடம்பெறுகிறது..


விழாவின் இறுதி நாளான அடுத்த ஞாயிறு வைரமுத்து அவர்கள்  அவரின் "மூன்றாவது  உலக போர்"  நூலை  வெளியிட்டு  பேசுகிறார்.

இறுதி நாளில் பல புத்தகங்கள் விற்று தீர்ந்து விடும் என எண்ணுகிறேன். பல முக்கிய  எழுத்து ஆளுமைகளின் புத்தகங்களை கண்டேன்..

நான் கண்ட சில புத்தகங்கள்.
1. சில இறகுகள் சில பறவைகள் - வண்ணதாசன்
2. பிரமலைக் கள்ளர்  வாழ்வும்  வரலாறும் - சுந்தர வந்தியத்தேவன்
3. மணல் உள்ள  ஆறு  - கல்யாண்ஜி
4. நினைவின்   தாழ்வாரங்கள் & உருள் பெருந்தேர் -  கலாப்ரியா
5. நிலா பார்த்தல் -  வண்ணதாசன்
6. கல்கியின் படைப்புகள்
7. சுகி சிவம்  அவர்களின் பேச்சு

.