Sunday, January 11, 2009

தந்தையின் கரங்களை பற்றியபடி



நாம் பெரியவர்களாக வளர்ந்து விட்ட பின் பெற்றோரை பெரும் சுமையாக கருதுகிறோமா என்பது இன்றுள்ள பெரிய கேள்வி. முதியோர் இல்லத்தில் இருந்த தாயும் அன்று அர்ச்சனை செய்தாளாம். அன்று தன் மகனுக்கு பிறந்த நாள் என்ற பூரிப்பு அவளுக்கு. எல்லா தருணங்களிலும் பெற்றோருக்கு தன் குழந்தைகள், குஞ்சு குளுவான்களே. ஆனால் பிள்ளைகள் எவ்வளவு தூரம் உணர்ந்துள்ளோம்? அதற்கான விடை இந்த சம்பவம் மூலம்...

ஒரு தந்தை, தன் மெத்த படித்த மகனுடன் அறையின் வரவேற்பறையில் அமர்ந்துள்ளார். அவர்களின் ஜன்னலோரம் ஒரு காகம் வந்தமர்கிறது. அந்த தருணத்தில், தந்தை, தன் மகனிடம் இது என்ன என கேட்டார். மகன் தந்தையிடம், இது, "காகம்" அப்பா என சொன்னான்.

சில நிமிடங்களுக்கு பின்னர், தந்தை மகனிடம் அதே கேள்வியை கேட்டார். பதிலுக்கு மகன், அப்பா, இப்பொழுது தான் உங்களிடம் சொன்னேன், "இது காகம்" என பதில் சொன்னான்.

சில கணங்களுக்கு பின்னர் தந்தை தன் மகனிடம், மூன்றாவது முறையாக அதே கேள்வியை கேட்டார். இந்த முறை மகன் மிகுந்த எரிச்சல் அடைந்தவனாய், "இது காகம் அப்பா! காகம்" என சொன்னான்.

இதன் பின்னரும் தந்தை நான்காவது முறையாக, இது என்ன? என மகனிடம் கேட்டார். இந்த முறை, மகன் மிகுந்த சப்தத்துடன், "இதே கேள்வியை எத்தனை முறை கேட்பீர்கள். நான் முன்பே சொன்னேன், இது காகம். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?" என சொன்னான்.

சிறிது நேரத்திற்கு பின், தன் அறைக்கு சென்று திரும்பிய தந்தை, தன் பழைய டயரி உடன் திரும்பி வந்தார். அந்த டயரி தன் மகன் பிறந்தது முதல், அவர் பயன்படுத்தி, காத்து, வந்துள்ளார். ஒரு பக்கத்தை புரட்டிய தந்தை, அதை மகனிடம் தந்து படிக்க சொன்னார். அதில் பின்வரும் சம்பவம் விவரிக்கப்பட்டு இருந்தது.

நான் என் மூன்று வயது மகனுடன், வீட்டின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு காகம், சன்னலோரம் வந்து அமர்ந்தது. அப்போது என் மகன், மொத்தம் இருபத்து மூன்று முறை, இது என்ன என்ற கேள்வியை என்னிடம் கேட்டான். நானும், அவனிடம் சலிக்காமல், இது காகம் என சொல்லி வந்தேன். இதன் காரணமாய், நான் ஒருபோதும் எரிச்சல் அடையவில்லை. மாறாக என் மகன் மேல், நிறைய பிரியம் வளர்ந்தது. அவனது வெகுளி நிலையை நான் ரசிக்கவும் செய்தேன்.

மகனுக்கு இருபத்து மூன்று முறை அதே கேள்விக்கு பதில் சொன்னபோது, அவர் எரிச்சல் அடையவில்லை. ஆனால், மகன் நான்கு கேள்விக்கே, நிறைய கோபமும், வெறுப்பும் அடைகிறான்.

எனவே, உங்கள் பெற்றோர் வயதான படியால், அவர்களை வெறுத்து ஒதுக்குவதோ, சுமையாக எண்ணுவதோ கூடாது. அவர்களிடம் எல்லா தருணத்திலும் அன்பும் கருணையும் காட்டுங்கள். நிறைய பொறுமையும், பணிவையும் அவர்கட்கு அளியுங்கள். எப்பொழுதும் இதை உங்கள் கருத்தில் ஆழமாக பதித்து வைத்திருங்கள்.

உங்களுக்குள் இதை அனுதினமும் சப்தத்துடன் உச்சரியுங்கள். "நான் என் பெற்றோரை எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியுடன் காண ஆசை படுகிறேன். அவர்கள் நான் பிறந்த நாள் முதலாய், அக்கறையோடு காத்து வந்துள்ளனர். எல்லை இல்லாத, தன்னலம் அற்ற அன்பை எப்பொழுதும் என்மேல் சொரிந்து வந்துள்ளனர். அவர்கள், என்னை சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்திட, எத்தனையோ குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும், வெப்பத்தையும் குளிரையும் பொருட்படுத்தாது கடந்து வந்துள்ளனர்".

ஆகவே இறைவனிடம் இப்படி பிரார்த்தியுங்கள். "நான் என் பெற்றோருக்கு சிறப்பான முறையில் சேவை செய்வேன். என் அன்பான பெற்றோருடன், கனிவுடன் பேசுவேன். அவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் என் நற்சொல் மாறாது."

[ இந்த எழுத்துக்கள், மின்னஞ்சல் மூலம், என்னை வந்தடைந்தவை. நிறைய யோசிக்கவும், நிறைய நடைமுறைப்படுத்தவும் எனக்கு உதவியவை. ஆகவே, இவை என் வரையில் அர்த்தம் நிறைந்தவை. ]
.
.

3 comments:

எட்வின் said...

//நிறைய பொறுமையும், பணிவையும் அவர்கட்கு அளியுங்கள். எப்பொழுதும் இதை உங்கள் கருத்தில் ஆழமாக பதித்து வைத்திருங்கள்// மிகச்சரி.

malar said...

நிங்க எழுதிய வரிகள் அத்தனையும் உண்மை . ஆழமான கருத்துகள் .ஆனால் நடைமுரைய்ல் யாரும் கோபத்தில் பேசுவது என்று பேசுவது இல்லை .பேசிய பிறகு பேசிவிட்டோம் என்று வருத்த படுவதும் உண்டு .வழமையாக இதைதான் எல்லோரும் சொல்கிறார்கள் .கோபத்தை தடுப்பது எப்படி? எரிச்சல் வரும்போது , ,கோபப்படாமல் இருப்பது எப்படி என்று யாராவது சொல்ஹிரர்கலா? தெரிந்தவர்கள் எழுதலாமே .

நான் நரேந்திரன்... said...

Thanks Dude

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்